News April 6, 2025
நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மூவலூர் ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாமில் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ரூ.8000 முதல் உதவி தொகை வழங்கப்படும்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பூட்டிய வீட்டின் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்கள் வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் ரோந்து போலீசார் உங்கள் வீட்டை 24 மணி நேரமும் கண்காணிப்பர். வீட்டிற்கு இரட்டை பூட்டு அமைப்புகளை பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.