News April 16, 2024
நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
ராணிப்பேட்டையில் சாலை விபத்து

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டையைச் சேர்ந்த பன்னீர் -சரிதா ஆகியோரின் மகள் தர்ஷினி மற்றும் மகன் மோகன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நேற்று(டிச.12) விளாப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே விபத்தில் சிக்கி தர்ஷினி படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினார்.
News December 13, 2025
ராணிப்பேட்டையில் குட்கா விற்பனை!

காவேரிப்பாக்கம்; பாணாவரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது, புருஷோத்தமன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் அவரைக் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 13, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


