News April 11, 2025

நிறுத்தப்படும் வெம்பக்கோட்டை அகழாய்வு

image

வெம்பக்கோட்டையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் துவங்கி தற்போது 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நுண் கற்காலத்தை அறியும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த அகழாய்வில் நுண்கற்காலம் சார்ந்த தொல்பொருட்கள் இதுவரை கிடைக்காததால் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வதற்கான திட்டம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 15, 2025

சிவகாசி அருகே சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

image

சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் விளாம்பட்டி, மாரனேரி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் குறுகலான நிலையில் சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 14, 2025

விருதுநகரில் புகார் அளிக்க எண் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் 8925811346 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

News September 14, 2025

விருதுநகர்: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

image

விருதுநகர் மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விருதுநகர் மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!