News March 18, 2025
நிர்வாணமாக நடித்தது ஏன்…. மனம் திறந்த சம்யுக்தா

‘சுழல் 2’ வெப்சீரிஸில் நிர்வாண காட்சிகளில் சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. இதுபற்றி கூறியுள்ள அவர், இந்த காட்சிகளில் நடிக்கும் முன், தன் தாயிடம் சொல்லி ஒப்புதல் பெற்றதாகவும், சிறையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ராவாக இயக்குநர் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கட்டாயப் படுத்தவில்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Similar News
News March 19, 2025
வைகோ பேசியதை நீக்குக: நிர்மலா ஆவேசம்

இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையும் கைகோர்த்து தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதாக வைகோவின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய கடற்படை மீதான குற்றச்சாட்டை வைகோ திரும்ப பெற வேண்டும்; அந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய நிர்மலா, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
News March 19, 2025
கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை: CM ஸ்டாலின் உறுதி

நெல்லையில் ஓய்வு பெற்ற SI ஜாகிர் உசேன் கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், கொலை செய்யப்படுவதற்கு நிலப் பிரச்சனையே காரணம் என்றும், கொலைக்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோ குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
News March 19, 2025
BREAKING: CSK போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தன

CSK vs MI மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய நிலையில், 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. 38,000 பேர் மட்டுமே அமரக் கூடிய வசதி கொண்ட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆன்லைன் புக்கிங் செய்ய 2.50 லட்சம் பேர் காத்திருந்தனர். இதில் பலருக்கும் டிக்கெட் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். வரும் 23ஆம் தேதி போட்டி நடைபெற உள்ளது.