News June 27, 2024
நிருப்புகலூர் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருப்புகலூரில் வாஸ்து தலமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இன்று சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரில் நடந்த படப்பிடிப்புக்காக வந்த சசிகுமார், அக்னீஸ்வரரை தரிசிக்க வந்தது தெரியவந்தது. கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சசிகுமாரை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர் .
Similar News
News November 28, 2025
மழைநீர் சேகரிப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே விழிப்புணர்வு பேரணி, நாளை (28.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கொடியசைத்து பேரணி துவக்கி வைக்க உள்ளார்.
News November 28, 2025
நாகை: விளையாட்டு வீரர்களுக்கு அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.மு. குமரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் உடற்பயிற்சி கூடங்கள், பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்ய (டிசம்பர் 4) கடைசி நாளாகும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விரைந்து தங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து, தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


