News October 25, 2024
நியாய விலை கடைகள் வழக்கம்போல் செயல்படும்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின்படி பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் நியாயவிலை கடைகள் 27ம் தேதி வழக்கம்போல் செயல்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1050 நியாய விலை கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
கிருஷ்ணகிரியில் நாளை எங்கெல்லாம் கரண்ட் கட்?

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 14, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பர்கூர் துணி இதனால்தான் இவ்வளோ ஃபேமஸா?

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.


