News March 19, 2025
நியாய விலை கடைகளில் சரியான அளவில் பொருட்கள் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் சரியான முறையில் அனுப்பப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எந்த ஒரு புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் சரியான அளவில் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.
Similar News
News March 19, 2025
நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையை இடமாற்ற திட்டம்

நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 40 முதல் 50 பேர் வரை கைதிகளை பார்க்க வரும் நிலையில், இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது. அதனால் புதிய சிறைச்சாலை அமைக்க அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே இடத்தில் 30 ஏக்கர் அளவிற்கு புறம்போக்கு நிலங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
News March 19, 2025
திருவனந்தபுரத்தில் வைகுண்டருக்கு மணி மண்டபம்: கேரள முதல்வர்

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அயயா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள நாடார் சமூக மக்களிடம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வைகுண்ட சாமி தர்மபரிபாலன அமைப்பு தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான பிரதிநிதிகள் கேரள முதலமைச்சரை சந்தித்தபோது இதை அவர் கூறியதாக தகவல்.
News March 19, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 19) 28.55அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.10 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 50 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.