News March 27, 2025

நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால்  குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Similar News

News July 5, 2025

தேரோட்டம் செல்லும் பக்தர்களுக்கு உதவி எண்கள்

image

நெல்லையப்பர் கோயில் ஆனி பெரும் தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை 8ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வசதியாக காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News July 5, 2025

நெல்லை இஸ்ரோ மையத்தில் ககன்யான் சோதனை வெற்றி

image

நெல்லை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஸ்எம்எஸ்டிஎம் மாடல் இன்ஜின் 4-ம் கட்ட பரிசோதனை 130 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ நேற்று (ஜூலை 4, 2025) தெரிவித்தது. முதல் கட்டமாக 30 வினாடிகள், இரண்டாம் கட்டமாக 100 வினாடிகள் சோதனை நடந்த நிலையில், இந்த வெற்றியால் இஸ்ரோ வட்டாரம் மகிழ்ச்சியடைந்துள்ளது.

error: Content is protected !!