News March 29, 2025
நின்ற கோலத்தில் காட்சி தரும் சனிஸ்வர பகவான்

வேலூர் அருகே வாலாஜா பகுதியில் உள்ள வன்னிவேடு கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சனிஸ்வர பகவான் ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சனிஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொத்து அணிந்து எள் தீபமேற்றி வழிபடலாம். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2025
குடியாத்தத்தில் தனியார் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் சார்பில், வரும் 11ஆம் தேதி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
News April 9, 2025
பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை

வேலூர் அரசு உதவி பெறும் (ஊரிஸ்) தனியார் கல்லூரியில், பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில், தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டார். வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
News April 8, 2025
வேலூர் தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது

வேலூர் ஊரீசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மார்ச் 18-ம் தேதி 7 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ஆந்திராவில் பதுங்கி இருந்த கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.