News April 13, 2025

நினைத்தை நிறைவேற்றும் திருக்கோவிலூர் ஆலயம்

image

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இதுவரை வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியும். இந்த புத்தாண்டிற்கு தேவாரம் பாடப்பெற்ற திருக்கோவிலூர் சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 7, 2026

கள்ளக்குறிச்சியில் 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் திருச்சி வேலூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 7, 2026

தவெக தலைவர் விஜயை சாடிய எம்பி ரவிக்குமார்!

image

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று விசிக எம்பி ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர். அப்போது, பேசிய எம்பி ரவிக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவின் பிடியில் சிக்கித் தவிக்கிறார் என பேசினார்.

News January 7, 2026

கள்ளக்குறிச்சியில் துணிகரம் – பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

image

கள்ளக்குறிச்சி: ஏமப்பேரைச் சேர்ந்த பிரியா (38) டியூஷனில் இருந்த தனது மகள் சுவேதாவை (16) அழைத்துவர பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது பிரியாவும் பிடித்து இழுத்த நிலையில் பாதியை மட்டும் (2.5 பவுன்) பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரில் SP அரவிந்த் நேரில் சென்று விசாரித்தார்.

error: Content is protected !!