News November 3, 2024

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் தரலாம்

image

தேவகோட்டையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த ட்ரூவே பிஸ்னஸ் செர்விஸ் பிரைவேட் லிமிட் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி தெரிவித்தார். முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி புகார் அளிக்கலாம்.

Similar News

News November 19, 2024

போக்ஸோ வழக்கு கைதிகளுக்கு குண்டாஸ் – ஆட்சியர்

image

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.09.2024 அன்று துவரங்குறிச்சியை சேர்ந்த ராசு மற்றும் முருகேசன் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று (நவ.19) சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

News November 19, 2024

சிவங்கை: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். *பகிரவும்*

News November 19, 2024

 Gpay வில் லட்சம் பெற்ற VAO பணிநீக்கம் – ஆட்சியர் உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாக அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் வி.ஏ.ஓ ராக்கு என்பவர் ரூ.3000 Gpay வாங்கிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.