News November 24, 2024

நிதி அமைச்சரின் நாளைய நிகழ்ச்சி விபரம் வெளியீடு

image

தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசின் நாளைய (25.11.2024) நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி அளவில் கெப்பிலிங்கம்பட்டி சமுதாய கூடம், டி.கடமங்குளம் பயணிகள் நிழற்குடை, கீழ்உப்பிலிக்குண்டு கலையரங்கத்தை திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

விருதுநகர் அருகே மின்வேலி அமைத்த நபர் கைது!

image

தொப்பலாக்கரையில் நேற்று விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற விவசாயி உயிரிழந்தார். தோட்டத்திற்கு உரம் போடச் சென்றபோது அருகிலுள்ள தங்கப்பாண்டியன் தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி மாரிச்சாமி பலியான நிலையில் பரளச்சி போலீசார் தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்தனர்.

News November 24, 2025

விருதுநகர்: நவ.28-க்குள் விண்ணப்பிக்கவும் – ஆட்சியர்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

விருதுநகருக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!