News December 4, 2024
நாளை (4) எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்து நிலுவையில் உள்ள மனுக்கள் சம்பந்தமாக புகார் மனு அளிக்கலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
தூத்துக்குடி: பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (57). இவரது கடைசி மகன் சுந்தர் (25). கட்டிடத்தொழிலாளியான சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவரை தாய் சாவித்திரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் சுந்தர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 2, 2026
தூத்துக்குடிடில் இன்றைய இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News January 1, 2026
தூத்துக்குடி: GH-ல் இவை எல்லாம் இலவசம்

தூத்துக்குடி GH-ல் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526/0461-2334282 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.


