News March 27, 2025
நாளை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.28) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்த உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 4, 2025
காஞ்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
காஞ்சி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை தொடர் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இன்று வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயணத்தை அமைத்துக் கொள்ளவும். மழை காரணமாக இரண்டு நாள்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.3) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


