News March 25, 2025
நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்

மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய +2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதலே கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், நாளை மறுநாளுடன் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைவதால், அவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட, இப்போதே வெளியூர் பயணத் திட்டம் குறித்து ஆலோசனை செய்யுங்கள்..
Similar News
News April 1, 2025
வலி என்றால் என்னவென்று காட்டுவேன்: டிரம்ப் வார்னிங்

USA கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், ஹவுதி குழுவுக்கும், ஈரானுக்கும் வலி என்றால் என்னவென்று காட்டுவேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2 வாரமாக நடந்து வரும் ஹவுதிக்கு எதிரான தாக்குதல் வெறும் சாம்பிள் தான் எனவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்ட முறை USA கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
News April 1, 2025
வணிக சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. GAS விலை மாற்றம் குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News April 1, 2025
இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இதை அறிந்த மற்ற பகுதி மக்கள், ஃபிரான்ஸ் மக்களை கிண்டலடித்து Fun செய்தனர். அப்போது முதல் ஏப்.1 உலக முட்டாள்கள் தினமானது.