News May 16, 2024
நாளை பேச்சிப்பாறை அணை திறப்பு..?

மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கட்டில் 42 அடி நீரையும், பெருஞ்சாணி அணையில் 70 அடி நீரையும் தேக்கி வைக்க பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை பெரும்பாலும் அணையின் மறுகால் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 4, 2025
குமரி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News December 4, 2025
குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

கருங்கல் டிரைவர் சாஜிக்கும் (35), ஆப்பிக்கோடு சுஜினுக்கும் முன்விரோதம் இருந்தது. டிச.2.ம் தேதி சாஜி ஆப்பிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சுஜின், அவரது நண்பர்கள் அசோக், ரதீஷ், சுஜித், ரெஜி ஆகிய 5 பேரும் சேர்ந்து சாஜியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, கையிலிருந்த 5 பவுன் பிரேஸ்லெட்டை பறித்துச் சென்றனர். சாஜி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. கருங்கல் போலீசார் விசாரணை.
News December 4, 2025
குமரி: 2,000 லிட்டர் மண்ணெண்ணய் கடத்தல்

நேற்று முன்தினம் (டிச.2) இரவில் கொல்லங்கோடு போலீசார் நீரோடி சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 55 கேன்களில் 2,000 லிட்டர் மானிய விலையில் மீனவர்களுக்கு விற்கப்படும் மண்ணெண்ணய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு மண்ணெண்ணய் கடத்த முயன்ற கலிங்கராஜபுரம் டிரைவர் லாலுவை (31) கைது செய்தனர்.


