News August 2, 2024
நாளை பத்திரப்பதிவு அலுவலம் செயல்படும்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஆக.,3) பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
தூத்துக்குடி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 8, 2026
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 8, 2026
தூத்துக்குடி: வியாபாரி அடித்துக்கொலை.. 3 பேர் கைது

சாத்தான்குளம் அருகே முதலூரை சேர்ந்தவர் மார்ட்டின் (30). கார் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நெல்லை சீவலப்பேரி அருகே சுடுகாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இது தொடர்பாக நெல்லை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உடையார்பட்டியை சேர்ந்த நம்பிராஜன் 31, பணகுடியை சேர்ந்த கிதியோன் 20, தோணித்துறையை சேர்ந்த முருகப்பெருமாள் 22 ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இவர்களை நேற்று கைது செய்தனர்.


