News April 14, 2025
நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மயிலாடுதுறையில் இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகளில் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.நாளை முதல் மீனவதொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையிழப்பர். தடைகால மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 18, 2025
நாளை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.
News April 18, 2025
விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்டஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவர்ருக்கு மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்றார்.
News April 18, 2025
மயிலாடுதுறை:ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.