News April 8, 2025
நாளை காவல்துறை குறை தீர்ப்பு நாள் கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது, அந்த வகையில் நாளை (ஏப்ரல் 9) நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொதுமக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
தூத்துக்குடியில் இளைஞர் மீது குண்டாஸ்

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.11.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மாமுனீஸ்வரன் (21) கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் போலீசார் தர்மா முனீஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 20, 2025
தூத்துக்குடி: கார் மோதி பெண் பரிதாப பலி

ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தை சேர்ந்த சுடலை என்பவரின் மனைவி மருதக்கனி (46). இவர் நேற்று தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மருதக்கனி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மருதக்கனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதில், கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ்குமாரை (38) போலீசார் கைது செய்தனர்.
News December 20, 2025
தூத்துக்குடி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


