News August 18, 2024
நாளை இப்பகுதியில் மின்தடை

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
கொடுமுடி அருகே ரயில் மோதி ரேஷன் கடை ஊழியர் பலி

கொடுமுடி அருகே கருவேலாம்பாளையத்தை சேர்ந்த கர்ணன் (60) ரேஷன் கடை பணியாளார். நேற்று காலை இயற்கை உபாதைக்காக ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, ஈரோடு–திருச்சி பயணிகள் ரயில் மோதி உயிரிழந்தார். அவருக்கு சரிவர காது கேளாதவர் என்பதும் தெரியவந்தது. தகவலின் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

“படியில் பயணம் நொடியில் மரணம்” பயணம் என்பது பேருந்துகள் அல்லது ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதன் ஆபத்துகளை உணர்த்தும் ஒரு பிரபலமான எச்சரிக்கை வாசகம். இது, படிக்கட்டுப் பயணத்தால் ஏற்படும் எண்ணற்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி, பாதுகாப்பாக பேருந்தின் உள்ளே பயணம் செய்ய பொது மக்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
News December 6, 2025
ஈரோடு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


