News September 13, 2024
நாளைய தினம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளைய தினம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கூடலூர் பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொலைதூர பகுதியில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் வருவதற்கு கூடலூர் பெரிய சோலை பகுதியில் இருந்தும் காலை ஏழு மணிக்கு, தாளூர் பகுதியிலிருந்து ஏழு மணிக்கு பேருந்து எடுக்கப்பட்டு இருப்பினும் காலை 8.30 மணிக்கு வந்தடையும் அளவில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக கூடலூர் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
நீலகிரி: வீடு கட்ட ரூ.2.50 லட்சம் மானியம் வேண்டுமா?

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். (SHARE)
News January 1, 2026
ஊட்டியே ஸ்தம்பித்தது

ஊட்டிக்கு வார விடுமுறை நாட்களில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகை தருவது வழக்கம். தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டி நகரில் அதிகரித்தது. இதனால், பல்வேறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
News January 1, 2026
நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்.. SAVE பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். (SHARE)


