News April 13, 2025
நாளைக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
நாகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 19, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமை பணிகளில் தேர்ச்சி பெறுவதற்காக ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்<
News November 19, 2025
நாகை: சாலையோரம் கிடந்த பிணம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


