News March 15, 2025

நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

image

தெரு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா (61) என்பவர் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்குப்பிறகு இன்று உயிரிழந்தார். அவரை கடித்த நாய், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கடி பட்டவரும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள்.

Similar News

News March 15, 2025

பேருந்துகளில் இலவச பயணம்- சிஎஸ்கே அதிரடிஅறிவிப்பு

image

சென்னை சேப்பாக்கத்தில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை போக்குவரத்து மாநகர பேருந்துகளில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News March 15, 2025

கல்வியில் சிறந்து விளங்க தர்மலிங்கேஸ்வரர் கோவில்

image

சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற சர்வமங்களா தேவி உடனமர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க சிறந்த தலமாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பயன்பெறுங்க, தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!