News January 2, 2025

நாமக்கல்: TNPSC தேர்வுக்கு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு, தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

அடடே! நாமக்கல்லுக்கு கிடைத்த பெருமை!

image

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் ஐந்து பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. அதில் நாமக்கல் சோப்புக்கல் சமையல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சோப்புக்கல் பாத்திரங்கள் வலிமையாகவும், நீடித்த உழைப்புடனும் இருப்பதால், குறைந்தபட்ச பராமரிப்புடன் கூட பல ஆண்டுகள் உடையாமல் இருக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 74 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன.

News December 5, 2025

பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

image

பரமத்தி அருகே வில்லிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(48) என்பவர் விவசாயி. அவரது மனைவி நர்மதாவுடன் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் மனவருத்தம் அடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!