News March 28, 2024

நாமக்கல்: 6,600 பேருக்கு அஞ்சல் படிவம் வழங்கல்

image

நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 4100-பேருக்கும்,மாற்று திறனாளிகள் 2500 பேருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.தேர்தல் நடக்கும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் அலுவலர்கள் உரிய பாதுகாப்புடன் நேரடியாக இவர்கள் வீட்டிற்கு சென்று,அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மேற்கொள்வர்.

Similar News

News November 7, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 6 சரிவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

News November 7, 2025

நாமக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

நாமக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

News November 7, 2025

நாமக்கல்லில் விபத்து.. ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!

image

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுதா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!