News May 3, 2024

நாமக்கல்: 6,120 போ் நீட் தேர்வு எழுதுகின்றனா்!

image

நீட் தோ்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனா். தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 போலீசார் வீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.

Similar News

News November 20, 2024

தபால்துறை இயக்குனருக்கு நாமக்கல் எம்பி கடிதம்

image

நாமக்கல் ரயில் நிலையத்தில், தபால் துறை சார்பில் இயங்கும், ஆர்எம்எஸ் என்னும் ரயில்வே மெயில் சர்வீஸ் தபால் வசதி இல்லை. கரூர் ரயில் நிலையத்தில் 1980 ஆண்டு முதல் ஆர்எம்எஸ் சேவை இயங்கி வருகிறது. இந்த மையத்தை திருச்சிக்கு மாற்றப்படுவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அந்த மையம் கரூரிலேயே இயங்க வேண்டுமென மத்திய ரயில்வே துறை இயக்குனருக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

News November 20, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1. மோகனூரில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் நடைபெற்றது.
2. ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் -வட்டாட்சியர் ஆய்வு
3. நாமக்கல்லில் 23ஆம் தேதி நடைபெறும் திமுக செயற்குழு கூட்டம்
4.நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு
5.மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன் கைது

News November 20, 2024

நாமக்கல் மாநகராட்சியில் நாளை சிறப்பு மருத்துவம்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.38 கொண்டிசெட்டிபட்டி மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.37 பெரியப்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.