News March 28, 2024

நாமக்கல்: 41 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

image

 நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட தாக்கல், செய்யபட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமா முன்னிலையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 41 வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாலை. வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 20, 2025

நாமக்கல்; கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (20-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த முட்டை விலை, நேற்று நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் அதே விலையில் நீடிக்கின்றது.

News November 20, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 20, 2025

நாமக்கல்: தண்ணீர் என நினைத்து குடித்து இளம்பெண் சாவு

image

நாமக்கல் திண்டமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (23), கணவர் மோகன்ராஜ் மற்றும் 3 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். திண்டமங்கலத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது, வயலில் பயன்படுத்த வைத்திருந்த விஷ மருந்து கலந்த தண்ணீரை குடிநீர் என தவறாக குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!