News February 17, 2025
நாமக்கல்: 3-ம் கட்டமாக 60 முகாம்கள் நடத்த உத்தரவு

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 17, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News October 17, 2025
நாமக்கல்: மின்கம்பி உதவியாளர் தேர்வு இன்றே கடைசி நாள்!

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் டிச.13,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. மின் ஒயரிங் தொழிலில் 5 வருட செய்முறை அனுபவம் (ம) 21 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த இணையதளத்தில் https://skilltraining.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.
News October 17, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை