News May 7, 2025

நாமக்கல்: 14 மையங்களில் 6,630 பேர் நீட் தேர்வு எழுத ஏற்பாடு

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை 14 மையங்களில் 6,630 மாணவ, மாணவிகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி போன்ற 14 தேர்வு மையங்களில் மொத்தம் 6,630 பேர் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Similar News

News December 1, 2025

நாமக்கல்லில் வாலிபர் திடீர் தற்கொலை!

image

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மிமீ மழை பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர்-1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1.20 மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 5.50 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

அசால்டாக அசத்திய நாமக்கல் முதியவர்!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கரூரில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சங்கிலி குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த கரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி முதல் பரிசை பெற்றார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

error: Content is protected !!