News March 21, 2024
நாமக்கல்: 100/100 களம் இறங்கிய ஆட்சியர்

நாமக்கலில் 19ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
Similar News
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 20, 2025
நாமக்கல்: தண்ணீர் என நினைத்து குடித்து இளம்பெண் சாவு

நாமக்கல் திண்டமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (23), கணவர் மோகன்ராஜ் மற்றும் 3 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். திண்டமங்கலத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது, வயலில் பயன்படுத்த வைத்திருந்த விஷ மருந்து கலந்த தண்ணீரை குடிநீர் என தவறாக குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
நாமக்கல்: மகளிர் சுய உதவி குழுவில் ரூ.10 லட்சம் மோசடி!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்த வாழவந்தி கோம்பை ஊராட்சியின் புளியங்காடு கிராம மகளிர் சுயஉதவி குழுவில், உறுப்பினர்களின் ஒப்புதலுமின்றி 3 பெண்கள் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. வங்கி மீதமுள்ள பெண்களிடம் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த 3 பெண்கள்மீது சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.


