News May 10, 2024
நாமக்கல்: 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் அருகே முத்துடையார்பாளையத்தை சேர்ந்த மாணவி ஹரிணி புதன்சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி ஹரிணி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக இடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணிக்கு ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
Similar News
News November 22, 2025
100 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கட்சியினா் சிறப்பாக கொண்டாட வேண்டும், நவ.27-ல் பிறக்கும் நூறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவித்தாா்.
News November 22, 2025
நாமக்கல்: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் கோழிகளில் ஏற்பட்ட வெள்ளை கழிச்சல் காரணமாக பல கோழிகள் இறந்ததாக, கோழி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள், கோழிகளின் எதிர்ப்பு சக்தியை ஊநீர் பரிசோதனை மூலம் அறிந்து, தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேலும் உயிர் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 22, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 77.10 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் நவ.22 ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 9.40 மிமீ, நாமக்கல் 12 மிமீ, பரமத்திவேலூர் 20 மிமீ, புதுச்சத்திரம் 2 மிமீ, ராசிபுரம் 9 மிமீ, சேந்தமங்கலம் 5.40 மிமீ, திருச்செங்கோடு 2 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 6.30 மிமீ, கொல்லிமலை செம்மேடு 11 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 77.10 மிமீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


