News May 7, 2025
நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 30) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
Similar News
News December 1, 2025
நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News December 1, 2025
நாமக்கல்லில் வாலிபர் திடீர் தற்கொலை!

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர்-1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1.20 மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 5.50 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


