News April 22, 2025
நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 395 காசுகளாக இருந்து வந்த நிலையில், இன்று (22.04.2025) நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
நாமக்கல்: கம்மி விலையில் பஸ் டிக்கெட்! CLICK NOW

நாமக்கல் மக்களே.., தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் போட்டாச்சா..? கவலை வேண்டாம்! தமிழக அரசின் சிறப்பு பஸ்களில் மலிவு விலையிலேயே புக் செய்யலாம். அதற்கு இங்கே <
News October 15, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில் 77,434 விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 13,416 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது பதிவு செய்யாதவர்கள் வரும் அக்.25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 15, 2025
தக்காளி மற்றும் மிளகாய் ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி!

நாமக்கல் லத்துவாடி அருகே உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (அக்.16) காலை 10 மணி முதல் 4 மணி வரை “தக்காளி மற்றும் மிளகாய் ஊட்டச்சத்து மேலாண்மை” பற்றிய ஒரு நாள் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பினை முனைவர் சு. சத்யா அவர்கள் வழி நடத்துகிறார். எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் 04286-266345, 99430-08802 இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.