News April 10, 2025
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
Similar News
News December 7, 2025
நாமக்கல்: பள்ளியில் 14,967 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200 வரை.
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 11.12.2025.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 7, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 7, 2025
மாணிக்கம்பாளையம் அருகே பைக் மோதி விபத்து!

மாணிக்கம்பாளையம் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி அருகே நேற்று இரவு (டிச.06) 10 மணியளவில் இறுதி சடங்கு செய்து கொண்டிருந்த அப்பகுதி மக்களின் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 15 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த எலச்சிபாளையம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


