News April 26, 2025
நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிநாய்த்தடுப்பபூசி முகாம்

உலக கால்நடைகள் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளிலும் வெறி நோய்த்தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணி முதல் 12 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 26, 2025
நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப். 26) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
News April 26, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு 1 கிலோ ரூ.88 என நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-26) நடைபெற்ற கூட்டத்தில், கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85 ஆகவும், அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 26, 2025
நாமக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

பள்ளி பயிலும் மாணாக்கர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் சேர நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 05 மே 2025. SHARE IT!