News September 14, 2024
நாமக்கல் மாவட்டத்தில் 73 மையங்களில் குரூப்-2 தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் இன்று நடைபெற உள்ள குரூப்-2 முதல்நிலை போட்டித்தேர்வை 22,277 பேர் எழுதுகிறார்கள். நாமக்கல் தாலுகாவில் 10, 742 பேரும், ராசிபுரம் தாலுகாவில் 6,093 பேரும், திருச்செங்கோடு தாலுகாவில் 5,442 பேரும் என மாவட்டத்தில் 22, 277 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களை கண்காணிக்க 73 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Similar News
News September 19, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டை விலை ரூ.5.25 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News September 19, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.18 நாமக்கல்-(ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி-9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி- 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 18, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (18.09.2025) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடியாக உதவிக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.