News August 17, 2024
நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 25 மி. மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 11 மி.மீ.யும், அடுத்த 2 நாட்கள் முறையே 7 மற்றும் 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரி ஆகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 16, 2025
திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமையால் விபரீதம்!

திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து (26) என்பவர், ரூ.3 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கிய நிலையில், அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. வட்டியுடன் பணம் செலுத்திய பின்னரும் அசல் மற்றும் அபராத வட்டி கேட்டு நேற்று இரும்புக் கம்பியால் தாக்கியதில் முத்து ரத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை (புதன்) முதல் வரும் திங்கள்கிழமை வரையிலான நாட்களுக்கு காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
News December 16, 2025
நாமக்கல்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


