News April 29, 2025

நாமக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க நேர்முகத்தேர்வு

image

நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று (29.4.2025) மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News November 26, 2025

நாமக்கல்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் நவ.28ந் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 26, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 7 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 26, 2025

திருச்செங்கோடு அருகே விபத்தில் தொழிலாளி பலி!

image

சேலம் மாவட்டம் சின்னனூர் வண்ணார்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (55), முடிதிருத்தும் தொழிலாளி. நேற்று திருச்செங்கோடு ஆன்றாபட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, எதிர் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பலியானார். அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்றாபட்டியை சேர்ந்த செல்வராஜ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!