News October 30, 2024
நாமக்கல் மார்க்கெட்டில் மல்லிகை ரூ.1,200 விற்பனை
நாமக்கல் பூ மார்க்கெட்டில், சுற்றுவட்டார விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதன்படி இன்றைய பூக்கள் விலை விவரம், மல்லிகை ரூ.1,200, முல்லை ரூ.900, அரளி ரூ.180, சம்மங்கி ரூ.100, மஞ்சள் அரளி ரூ.250, செவ்வரளி ரூ.250, ஜாதிமல்லி ரூ.500, காக்கட்டான் ரூ.600, நந்தியாவட்டம் ரூ.240 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பூக்கள் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News November 20, 2024
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
நாமக்கல், கொல்லிமலையில் தொடர்மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள பெருக்கால் அருவியின் அடிவாரப்பகுதியில் நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
News November 19, 2024
நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 பெரிய அய்யம்பாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.8 கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 19, 2024
நாமக்கல் தலைப்பு செய்திகள்
1.நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.ரேப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாள் கொண்டாட்டம்
3.டூவிலரில் இருந்து முதியவர் தூக்கி வீசப்படும் காட்சி வெளியீடு
4.முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
5.நாமகிரியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது