News August 25, 2024
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு சுவற்றில் விளம்பர மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுவற்றை சுத்தப்படுத்தினர். இந்நிலையில் அந்த சுவற்றில் அரசின் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 14, 2025
நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலை தேடும் யாருக்காவது பயன்படும் இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், அமைந்த நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், 2025ம் ஆண்டிற்கான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, இன்று 14-12-2025 ஆஞ்சநேயர் சாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற இருப்பதால் மதியம் 1:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்துடன் நடை திறப்பு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 14, 2025
திருச்செங்கோடு: தவெக வேட்பாளர் இவரா?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெகவின் சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருச்செங்கோட்டில் அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் வேட்பாளராக நிற்பார் என்றும் , அவரை அந்த தொகுதியின் நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி செங்கோட்டையனும் ஆனந்த்தும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


