News May 7, 2025
நாமக்கல் மாணவர்களுக்கான முக்கிய எண்!

நாமக்கல்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால், இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News November 20, 2025
நாமக்கல்: இலவச பயிற்சியுடன் AIRPORT-ல் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள்<
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் OTP கேட்டு நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனே 1930-க்கு புகார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 20, 2025
நாமக்கல் வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் (SIR) படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பீர்கள். அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ எவரேனும் கேட்டால், அதை ஒருபோதும் பகிர வேண்டாம். “BLO அதிகாரியை நேரில் சந்திக்கிறேன்” என்று சொல்லி மறுக்கவும். OTP பகிர்வதால் மோசடி நடைபெறும் அபாயம் உள்ளது. பாதுகாப்பாக இருங்கள்.


