News May 17, 2024

நாமக்கல்: மழை உதவிக்கு 1077 அழைக்கலாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை உள்ளிட்ட பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மூலம் தெரிவிக்கலாம். மேலும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் நடைபெற்ற மழை தொடர்பான முன்னெச்சரிக்கை கூட்டத்தில் ஆட்சியர் ச.உமா தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களை முன்னிட்டு இயக்கப்படவுள்ள 06121/06122 சென்னை – செங்கோட்டை – சென்னை சிறப்பு ரயிலிலுக்கும், 06053/06054 நாகர்கோவில் – சென்னை – நாகர்கோவில் ரயிலிலுக்கும் நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கவுள்ளது. எனவே, நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி விடுமுறைக்கு சென்னை, மதுரை, திருநெல்வேலி, செல்வதற்கு பயனடைந்துகொள்ளவும்.

News September 16, 2025

நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 525 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News September 16, 2025

நாமக்கல்லில் வெளுக்கப்போகும் மழை!

image

நாமாக்கல் மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!

error: Content is protected !!