News May 17, 2024
நாமக்கல்: மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் நாமக்கல்லில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 3, 2026
நாமக்கல்லில் குடிபோதையில் விபரீதம்!

நாமக்கல்: வெண்ணந்தூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவரின் மகன் சண்முகம் (46). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகின்றனர். சண்முகம் தாய் சரோஜா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மனமுடைந்த சண்முகம் மதுபோதையில் விட்டத்தில் நைலான் கயிற்றை மாட்டி கடப்பாக்கல்லில் ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 3, 2026
நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 3, 2026
நாமக்கல்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

நாமக்கல் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <


