News April 28, 2025
நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. இது 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. SHARE IT!
Similar News
News November 21, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (21.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
நாமக்கல்லில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்!

நாமக்கல்லில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் 22-11-2025 சனிக்கிழமை மற்றும் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் முகாம் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பெயரை இணைத்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 21, 2025
நாமக்கல்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


