News April 28, 2025
நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.06) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (இளமுருகன் – 6374414072) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 6, 2025
திருச்செங்கோடு அருகே நடந்த பகிர் சம்பவம்!

திருச்செங்கோடு அருகே சிறுமொளசி பகுதியை சேர்ந்த பழனியப்பன்(76). கடந்த 7 ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால் மனஉளைச்சலில் 2ம் தேதி தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


