News August 19, 2024
நாமக்கல்: மனநல காப்பகத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல்: ராசிபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் 2 நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (60) என்பவருக்கும், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கைரூல் ஆஸ்மி (35) என்பவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் அடித்துக் கொண்டதில், தங்கராஜ தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Similar News
News November 10, 2025
நாமக்கல்: இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி!

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டி திரு.வி.க தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (70), கூலித் தொழிலாளி, சனிக்கிழமை மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி வையப்பமலை சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி, மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பொன்னாயா அளித்த புகாரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
நாமக்கல்: 2-ம் நிலை காவலர் தேர்வில் 2,696 பேர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நேற்று திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மொத்தம் 3,146 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,245 ஆண்களும் 451 பெண்களும் என 2,696 பேர் தேர்வில் பங்கேற்றனர். 450 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுகள் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 10, 2025
நாமக்கல் அருகே விபத்து; ஒருவர் பலி

நாமக்கல், நாமகிரிப்பேட்டை அருகே காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விவசாயி மாதேஸ்வரன் (55), இவர் நேற்று முன் தினம் டூவீலரில் சென்றபோது நிறுத்தியிருந்த டிராக்டர் மீது மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், பின்னர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


