News April 30, 2025
நாமக்கல்: மதுக்கடைகளை மூட உத்தரவு!

நாமக்கல் மாவட்டத்தில் 1.05.2025 நாளை மே தினத்தையொட்டி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி, விற்பனை செய்தாலோ, திறந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 1, 2025
நாமக்கல்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 1, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 1, 2025
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


