News April 15, 2024
நாமக்கல்: மதுக்கடைகளை மூட உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்ரல்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி அன்று முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேற்படி, உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (நவ.22) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என நாமக்கல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
நாமக்கல் மக்களே ரெடியா?

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் மேலாளர், கணினி இயக்குபவர், மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளுக்கு ஆட்களை நேரில் தேர்வு செய்ய உள்ளனர். அனைத்து கல்வித் தகுதியுடையோர் காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 21, 2025
திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பில்ட்டு மஞ்சிஹி (28) மற்றும் சோபியா (23) தம்பதி மொஞ்சனூர் அரசம்பாளையம் கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையிலான தகராறுக்குப் பிறகு மஞ்சிஹி வேப்பமரத்தில் தூக்கிட்டு கொண்டார். மனைவி மீட்டாலும், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.


