News April 15, 2025
நாமக்கல் மக்களே! இந்த App முக்கியம்!

தமிழகத்தில் “காவல் உதவி App” பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல், அவசரநிலையின் போதும் உடனடி உதவியைப் பெறுவதற்காக, கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கு, இந்த செயலியைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், மகளிர் அனைவரும் காவல் உதவி செயலியை, தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
Similar News
News April 19, 2025
நாமக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக சிவக்குமார் இன்று 19ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். ஏற்கனவே இருந்த ஆணையார் மகேஸ்வரி திருப்பூருக்கு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையராக சிவக்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
News April 19, 2025
திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது!

ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே பல கோடி மதிப்பிலான, 18 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற வெங்கடேசன், அப்துல் ஜலீல், ரவி ஆகிய 3 பேரை, ராசிபுரம் வனத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
News April 19, 2025
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்புகள்!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் சுமார் 6 அடி உயரமுள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடதுபுறம் சேலையும் அணிவிக்கப்படுகிறது. இக்கோவில் உள்ள திருச்செங்கோடு மலை ஒருபுறம் பார்க்கும் போது ஆண் போலவும், மறுபுறம் பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது. SHARE பண்ணுங்க!