News September 27, 2024
நாமக்கல் போதை பொருள் ஒழிப்பு மாரத்தான்

Chakravarthi study abroad Pvt Ltd உடன் இணைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நம்ம நாமக்கல் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நாமக்கல் காவல் நிலையம் உள்ள மைதானத்தில் 6/10/2024 அன்று காலை 5 மணிக்கு துவங்க உள்ளது. இதில் அணைத்து மாவட்டங்களில் இருந்தும் பங்கு பெறலாம் வயது வரம்பு கிடையாது.9894493331 தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
Similar News
News December 13, 2025
நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 13, 2025
நாமக்கலில் பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 13, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (13-12-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.114-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை, இதுவரை வரலாறு காணாத உச்ச விலையான ரூ. 6.15-க்கு விற்பனையாகி வருகின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கேக் தயாரிக்க முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை உயர்வடைந்துள்ளது.


